இன்று உலக சோசியல் மீடியா தினம்..!
உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை உள்ளங்கையில் இருக்கும் மொபைல் மூலம்.., நாம் தெரிந்துக்கொள்கிறோம். நமக்கும் உதுவும் வகையிலும், நம் அறிவை வளர்க்கும் விதமாகவும் கொண்டு வரப்பட்ட சமூக வலைத்தளம் பல இருந்தாலும்.
ஒரு சில சமூக வலைதளத்திற்கு நாம் அடிமையாகி விடுகிறோம்.., ஒரு சில சோசியல் மீடியாக்கள் அதில் தீமையும் கொடுக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறது.. சோசியல் மீடியா நல்லதா கெட்டதா என்று ஒரு கருத்து கணிப்பு.
முகம் தெரிந்த நண்பர்களுடன் பழகும் பொழுது.., பார்த்து பழக வேண்டும் என்று வீட்டில் கண்டிப்பார்க்கள், ஒரு சில சமூக வலைத்தளங்கள் முகம் தெரியாத நண்பர்களுடன் பழக தொடங்குவதற்கு காரணமாக அமைகிறது.
கெடுதல் தரும் என்று அந்த சமூக வலைத்தளங்கள் கண்டு பிடிக்கப்பட வில்லை.., பொழுது போக்கிற்காக கண்டு பிடிக்கப்பட்ட சமூக வலைத்தளத்தை நாம் தான் அப்படி மாற்றி வைத்திருக்கிறோம்.
ஒரு சில நிகழ்வுகள் கொண்டு செல்லப்படுவதால்.., அதாவது ஒரு குழந்தைக்கு மருத்துவ உதவி தேவை என்று சமூக வலைதளத்தில் பதிவிடப் படுகிறது, அது அந்த குழந்தைக்கு உதவும் என்று நாம் பதிவிடுகிறோம்.., அது பகிரப்பட்டு இதனால் அந்த குழந்தைக்கு நன்மை ஏற்படுகிறது.
அதுவே சில சமையம் தவறாக நடக்கும் திருட்டு அது பகிரப்பட்டு அவர்களின் வாழ்க்கையே கேள்வி குறியாக மாறிவிடுகிறது..,
சமூக வலைத்தளம் என்பது பொழுது போக்கிற்காகவும்.., அறிவை வளர்ப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது.., அது நாம் பயன் படுத்தும் விதத்திலேயே இருக்கிறது..