கடந்த வார இறுதி முதலே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில், இன்று மீண்டும் தடாலடியாக உயர ஆரம்பித்துள்ளது நகை வாங்க காத்திருப்போரையும், நடுத்தர மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நிலவரப்பட (மார்ச் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து 5,425 ரூபாயாகவும், சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 43,400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் அதிகரித்து 5,891 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 47,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் இன்று வெள்ளியின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 72 ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான எஸ்விபி, சிக்னேச்சர் ஆகியவற்றின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்தின் மீது முதலீட்டை அதிகரித்துள்ளது விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.