மேஷம்: இன்று உங்களுக்கு ஆக்கபூர்வமான நாளாக அமையும். உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான தினமாக இருக்கும்.திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.
மிதுனம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமைய இனிமையான பேச்சை மேற்கொள்ளுங்கள்.எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். எதிலும் வெற்றி உண்டாகும். மனகுழப்பம் தீரும். எதிலும் சிறு பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும்.
கடகம்: இன்று சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.
சிம்மம்: இன்று உங்களுக்கு கவனம் தேவை. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலையில் தடைகள் காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு அதிகமாக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.
கன்னி: இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான தினமாக இருக்கும்.
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள்.
துலாம்: இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.
விருச்சிகம்: இன்று எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தோல் பாதிப்பு ஏற்படலாம்.
தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான தினமாக இருக்கும்.
தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
மகரம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள்.
கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.
கும்பம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படலாம்.
மீனம்: இன்று மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பதிலும் தயங்க மாட்டீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம்.