இன்றைய ராசி பலன்..!! இந்த ராசிகாரர்களுக்கு மட்டும் அதிஷ்டம்..!!
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எல்லா வேலைகளிலும் கூடுதல் பொறுப்பும், கூடுதல் அக்கறையும் இருக்கும். உங்களை நம்பி நிறைய பெரிய விஷயங்களை ஒப்படைக்க போகிறார்கள். அதை எல்லாம் கவனமாக செய்து முடித்து நல்ல பெயரையும் வாங்கி விடுவீர்கள். பாராட்டும் புகழும் இன்று உங்களுக்கு மன நிறைவை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நன்மை நடக்க கூடிய நாளாக இருக்க போகின்றது. இடமாற்றத்தோடு பிரமோஷன் கிடைத்தால் வேலையில் அதை ஏற்றுக் கொள்ளலாம். நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான சில நல்ல முடிவுகளை இன்று எடுப்பீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ரொம்பவும் மகிழ்ச்சியான நாளாக இருக்க போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். சொந்த தொழிலில் நீங்கள் எதிர்பாராத நல்லது நடக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகமாக கூடிய நாள் இது. முடிந்தால் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது கூடுதல் மன நிறைவை கொடுக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு திறமை வெளிபடக்கூடிய நாளாக அமையும். புத்திசாலித்தனத்தோடு சிந்தித்து நிறைய விஷயங்களை நாசுக்காக செய்து முடித்து விடுவீர்கள். பிரச்சனையாக கூடிய விஷயங்களை கூட சரி செய்யும் அளவுக்கு உங்களுடைய புத்தி கூர்மை வேலை செய்யும். கஷ்டமான வேலை ஏதாவது இருந்தால் இன்றைக்கு செய்யுங்கள். அதில் நிச்சயம் உங்களுக்கு சக்சஸ் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் கூடுதல் பொறுப்பு இருக்கும். அந்த பொறுப்புகளை எல்லாம் செய்து முடிப்பதற்குள் உடல் அசதி ஏற்படும். நன்றாக ஓய்வு எடுத்து வேலையை செய்யுங்கள். ஒரேயடியாக ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. இன்றைய நாள் சந்தோஷமாக செல்லும் மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தடைகள் எல்லாம் விலகப் போகின்றது. நீண்ட நாட்களாக சிக்கலில் இருந்து வந்த சில வேலைகளை இன்று செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வரும் கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் பொறுமை தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. எந்த முடிவாக இருந்தாலும் ஒன்றுக்கு நாலு முறை யோசித்து எடுக்கவும். பிடிவாத குணத்தை விட்டால் நன்மை நடக்கும். வாழ்க்கை துணை சொல்லுவதை கேளுங்கள். மூன்றாவது நபர் சொல் பேச்சைக் கேட்டு எந்த ஒரு முக்கியமான வேலையையும் செய்யக்கூடாது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ஆன்மீக ரீதியான சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். எந்த ஒரு குழப்பம் நிலையிலும் தெளிவான முடிவை எடுக்கும் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த இந்த நாளில் பெரியோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை மறக்காமல் செய்து விடுங்கள். நன்மை நடக்கும்
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மன நிறைவான நாளாக இருக்க போகின்றது. குடும்பத்தோடு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இன்றைய நாள் முடிவதற்குள் நல்ல செய்தி செவிகளை எட்டும். நீண்ட நாள் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். சொந்தத் தொழிலை விரிவுபடுவது உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம் நல்லது நடக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. முயற்சிகளுக்கு உண்டான பலன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் உண்டு. புதிய வேலைக்கு ப்ரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மன நிறைவோடு முன்னோர்களது வழிபாட்டை செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் இருந்தாலும் சமாளித்துக் கொள்வீர்கள். சொநத தொழிலில் அகல கால் வைக்க வேண்டாம். முன்பின் தெரியாதவர்களை பார்ட்னராக சேர்த்துக் கொள்ளாதீர்கள். முதலீடு செய்வதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..