டோக்கியோவால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படலாம் என்று செய்திகள் வலியுறுத்துகிறது.

ஜூலை 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் என்று பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறி வந்தது.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது, “கொரோனா வைரஸ் அச்சறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதை தவிர வேறு வழியில்லை” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ் கூறுகையில்,” அடுத்த 4 வாரங்களுக்குள் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதில் போட்டியை ஒத்தி வைப்பது குறித்து விவாதிக்கப்படும். அதே சமயம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யும் எண்ணமில்லை என்றும் இதனால் யாருக்கும் எந்தவித லாபமும் இல்லை” என்றும் கூறினார்.

What do you think?

சென்னை, கோவை, நெல்லை தொட்டுத் தொடரும் கொரோனா!!!

‘கொரோனா எதிரொலி’ உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து!