தங்கத்தை மிஞ்சும் தக்காளி..!! இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை..?
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு ரேஷன் கடையில் விற்பனை செய்ய தொடங்கியது.
தங்கம் விலை எப்படி ஏற்றம் இறக்கத்துடன் இருக்கிறதோ அதைபோல் தக்காளியின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கோயம்பேடு காய்கறி பங்கு சந்தையில் நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில். இன்று குறைந்து 375 டன் அளவே இருந்துள்ளது.
இதனால் தக்காளியின் விலை கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விளைச்சல் அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால், அதிக தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்களில் கிலோ 230 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திரா மாநிலத்தில் தக்காளி விளைச்சல் இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் வியாபாரிகள், தக்காளியை ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர். எனவே ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தக்காளிகள் கூட வட மாநிலங்களுக்கு செல்வதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
பிற மாநிலங்களுக்கு தக்காளி சென்று கொண்டு இருப்பதால் தான் தமிழகத்திற்கு தக்காளி குறைவாக இறக்கு மதி செய்யப்படுகிறது. எனவே தான் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன் தக்காளியின் விலை கிலோ கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் நிலையில் இன்று அதிரடியாக 140 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை ஆவது மட்டுமின்றி இஞ்சியின் விலையும் கிலோ 260 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கும், பீன்ஸ் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகளின் விலை ஒரே அடியாக உயர்ந்து இருப்பதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.