“கோடி அருவி கொட்டுதே என் மேலே” உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்..!! இனி இங்க ஜாலியா படகு சவாரி போலாம்..!!
ADVERTISEMENT
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இரண்டு நாட்களுக்குப் பின்பு சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி.
தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி கரையோரங்களில் மழையின் காரணமாகவும் கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் கரையோரங்களில் பெய்த மழையின் அளவு முற்றிலுமாக குறைந்ததான் இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 18000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது..
இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 17,000 கன அடியாக நீர் வரத்து இருந்த நிலையில் இன்று மாலை நிலவரப்படி மேலும் குறைந்து வினாடிக்கு 12,000 கன அடியாக நீடித்து வந்தது. இந்த நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.