சென்னையில் 3நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..! எந்த பகுதிகளில் தெரியுமா..?
77வது ஆண்டு சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடபடுகிறது. இந்தநிலையில் சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு ஆக.5, 9, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்:
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா நடைப்பெறுவதை முன்னிட்டு இன்று5 மற்றும் 9,13 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.
இதனால் காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்க்கண்ட சாலைகளில் தற்பொழுது நடைமுறைகளில் உள்ள போக்குவரத்து கீழ்க்கண்ட வகைகளில் மாற்றி அமைக்கப்படவுள்ளது.
அதன்படி,
உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமைந்துள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
காமராஜாா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் காா்னா் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளா் சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (என்எப்எஸ் சாலை) வழியாக பாரிஸ் காா்னா் சென்றடையலாம்.
பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை, தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிஸ் கார்னர், வடக்கு கோட்டை பக்க சாலை, (NFS Road) இராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலைக்கு செல்லலாம்.
அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிஸ் காா்னா் செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிஸ் காா்னா் சென்றடையலாம்.முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜார் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
சிவப்பு மற்றும் பா்பிள் நிற வாகன அனுமதி அட்டை வைத்திருப்போா் காலை 8.30 மணிவரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக்கொண்டு, வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்த நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.
நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 08.30 மணிவரை இராஜாஜி சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி ரோடு, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
8.30 மணிக்கு பின்னா் காமராஜா் சாலை, உழைப்பாளா் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிஸ் காா்னா் சந்திப்பு, ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக தலைமைச் செயலகத்துக்கு எதிரில் உள்ள பொதுப்பணித் துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோா் போா்நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக்கொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் உள்ளே நிறுத்த வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் ஒத்துழைப்பை தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்