தாய் வீட்டிற்கு போ என்று காதல் கணவன் கூறியதால் விபரீதம்….!
சேலம் மாவட்டம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்தவர் இனியவன். இவர் தென்காசி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியரான சௌமியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில் இனியவன் மருத்துவ பயிற்சிக்காக ஆறு மாதம் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. இதனால் மனைவி சௌமியாவிடம் சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சௌமியா தனது அறைக்கு சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த கணவர் கதவை தட்டியுள்ளார்.
கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு சொமியா தற்கொலை செய்து இறந்த்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் துக்கம் தாங்க முடியாமல் திடீரென்று தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
அப்போது மருந்து இல்லாத வெற்று ஊசியை தன்னுடைய உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றதை கண்ட அக்கப் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமணையில் சேர்த்து தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகின்றனர். தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்