கேரளாவில் விளையாட சென்ற குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்..!
கேரள மாநிலம் காசர்கோடு சீமேனியை சேர்ந்தவர் ராதகிருஷ்ணண் புஷ்பா தம்பதியினர். இவர்களது இரட்டை குழந்தைகளான சுதேவ், ஸ்ரீதேவ் இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைகள் இருவரும் சைக்கிள் உடன் விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார்கள். விளையாட சென்ற இருவரும் மாலை வீடு திரும்பததால் பெற்றோர்களை அவர்களை தேடி சென்றனர்.
அப்போது அங்கு இருந்த குவாரிக்கு அருகே சிறுவர்களின் சைக்கிள்கள் கிடந்துள்ளது. அதனை கண்டதும் அருகில் சென்று பார்த்த போது சிறுவர்கள் இருவரும் குவாரியில் மூழ்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர்.
உடனே அவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமணைக்கு அழைத்து சென்றனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் ஏற்கனவே உயிரழந்தாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குவாரியில் மூழ்கி சிறுவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.