வீட்டை சுத்தம் செய்ய அழைத்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
வியாசர்பாடியை சேர்ந்த நாகராஜன் (82). ஓய்வு பெற்ற ரயில்வே உழியரான இவருக்கு சரோஜினிபாய் (78) என்ற மனைவி உள்ளார். இவரும் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்று வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் நாகராஜன் வீட்டின் உள்ளே தனது அறையிலும், சரோஜினிபாய் ஹாலிலும் இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து நாகராஜன் தனது அறையில் இருந்து வெளியேவந்துபோது, ஹாலில் சரோஜினிபாய் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.
மேலும் அவரது கழுத்தில் சார்ஜர் வயர் சுற்றியும் காது அறுபட்ட நிலையில் இருந்துள்ளது. பின் தலையிலும் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜன் இதுகுறித்து வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த மூதாட்டியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோப்பநாய், மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
விசாரனையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரோஜினி-நாகராஜன் தம்பதியினர் தங்கள் வீட்டை சுத்தம் செய்ய 3 பேரை அழைத்து சுத்தம் செய்துள்ளனர்.
அவ்வாறு சுத்தம் செய்ய வந்தவர்களில் கொருக்குப்பேட்டை பாளையம் 8வது தெருவைச் சேர்ந்த மங்கம்மாள் (51) என்பவர் தொடர்ந்து அழைத்ததன் பேரில் அடிக்கடி இவர்களது வீட்டை சுத்தம் செய்து வந்ததாக, தெரிய வந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மங்கம்மாளின் மகன் முரளி (34) என்பவர் நாகராஜன் வீட்டிற்கு சம்பவதன்று சென்றது பதிவாகி இருந்தது.
நேற்று அவரை பிடித்து விசாரித்தபோது, பகீர் தகவல் வெளியானது. தனது தாயாருடன் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் முரளி ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது வயதான தம்பதி இருவரும் தனிமையில் இருப்பதையும் அவர்களிடம் பணம், நகை இருப்பதையும் அறிந்து கொண்டு மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற முரளி, அவரை மிரட்டி அணிந்திருந்த நகைகளை கழற்றி தருமாறு மிரட்டியுள்ளார்.
அதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவித்து கத்தி கூச்சலிட்டதால், செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி, அவரது காதில் இருந்த ஒரு தங்க கம்மலை மட்டும் முரளி கழற்றி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதனால் முரளியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். மூதாட்டி என்றும் பாராமல் அவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்