பிரபல வெளியநாட்டு கம்பெனியால் ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்..!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பங்கரிஷிகுப்பம் பகுதியில் இயங்கி வரும் வெளிநாட்டு கோழி உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அகரம் சேரி, பல்லாலகுப்பம், கொத்தமாரிகுப்பம் ஆகிய கிராமத்திலும் செயல்பட்டு வருகிறது.
இந்த கம்பெனியில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என சுமார் 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த கம்பெனியில் அரசு நிர்ணயித்த கூலி உயர்வை ஊழியர்களுக்கு கொடுக்காமல் அலட்சியம் காட்டி வந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு வழக்குகள் நடத்தியும் அவர்களுடைய கூலி உயர்வை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை ஊழியர்கள் பணிக்கு வந்த போது நுழைவாயிலில் கம்பெனி இன்று முதல் மூடப்படுகிறது என்றும், இதில் பணி புரியும் யாருக்கும் இனிமேல் வேலை இல்லை என்றும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் மற்றும் இதர பணங்களை செட்டில் மெண்ட் செய்யபோவதாகவும் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டதற்கு முறையான பதில் சொல்லாததால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீரென வெளிநாட்டு கோழி வளர்க்கும் கம்பெனி மூடப்பட்டு ஊழியர்களுக்கு வேலை இல்லை என அறிவிக்கப்பட்டதால், ஊழியர்கள் மத்தியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து நம் மதிமுகம் ஊழியர்களிடம் இதை பற்றி கேட்கையில் அவர்கள் அளித்த பதில், கடந்த 13 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி விட்டோம், தற்போது நாங்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையும் மற்றும் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசாங்கம் நல்ல ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கம்பெனியில் மீண்டும் ஊழியர்களை பணி நியமானம் செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..