குற்றவாளிகளை கைது செய்ய வந்த காவலருக்கு நேர்ந்த சோகம்..! பரபரப்பான திருப்பத்தூர்..!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலராக மூர்த்தி பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வன பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் இவர் பல இடங்களில் தனது வசூல் வேட்டையில் கைவரிசை காட்டி உள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நிம்மியம்ப்பட்டு, ஆலங்காயம், ஏலகிரி, புதூர்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமூக விரோதிகள் மரங்களை வெட்டி செல்கின்றனர்.
இதனை தடுக்கும் அதிகாரியான இவர்கள் என்னப்பா வைரம் போல மரமா இருக்கு இதுக்கு 100 ரூபாய் கொடுத்தா எப்படி என்று உடன் இருக்கும் வனவர் ஜோதி மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோரை கை பாகையாக வைத்து கொண்டு தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளார்.
இது மட்டும் அல்லாமல் தன்னுடைய வசூல் சாம்ராஜ்யத்தை பயன்படுத்தி அசோக் லைலாண்ட் தோஸ்த் வாகனத்தில் வெட்டப்பட்ட மரங்களை வியாபாரத்திற்கு எடுத்துச் செல்லும் நபரிடம் பகிரங்கமாக மாமுல் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேஞ்சருக்கு மட்டுமில்ல எங்களுக்கும் கொடுக்கணும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அதேபோல வேறு ஒரு நபரிடம் 3000 ரூபாய் லஞ்ச பணத்தை வாங்கி தனது பர்சில் வைக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக பல ட்ரிக்ஸ்களை பயன்படுத்தி வண்டியை மடக்கி வசூல் செய்வதில் வல்லவராக திகழ்ந்து வருவதை அவரே தான் தான் என்று நான் மட்டும் தான் பேசணுமா ஜோதி வாயில் என்ன கொழுக்கட்டை வச்சிருக்கியா, வேணாம்னா விட்டுட்டு போயிடலாம் அவன் 500 கொடுத்தாலும் வாங்கிரு என்று கூறுவது உச்சகட்டமாக உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் இவர் வசூல் செய்வதில் அனுபவம் பெற்ற மூர்த்தி தினமும் ஒவ்வொரு வண்டி, செங்கல் சூளை உள்ளிட்ட இடங்களில் 100, 300, 500 ரூபாய் முதல் லஞ்சமாக பெற்றது அம்பலம் ஆகி உள்ளது.
இப்படி இருக்கும் இவர்களை கண்டிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள வனத்துறை அதிகாரிகளும் அவர்களிடம் பெறுவதை பெற்று கொண்டு கண்டும் காணாமல் இருந்து உள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்த பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
– லோகேஸ்வரி.வெ