காதல் விவகாரத்தால் இளைஞர்க்கு நேர்ந்த சோகம்..! போலீசார் விசாரணை..!
சென்னை துரைப்பாக்கம் கஸ்டம்ஸ் காலனி பகுதியில் வெப்சைட்டை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் புதுச்சேரியை சேர்ந்த 34 வயதான தரணிதரன், சென்னை திருவான்மியூர், லக்ஷ்மிபுரம் பகுதியை சேர்ந்த 34 வயதான ஹரிஹரன் உள்ளிட்ட 10 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று நிறுவனம் பாதிநாள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் நண்பகல் விடுமுறை விட்டதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் விடுமுறை விட்ட நிலையிலும் தரணிதரன் மற்றும் ஹரிஹரன் இருவரும் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தரணிதரன் நிறுவன உரிமையாளர் மீராவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கும் ஹரிஹரனுக்கும் சண்டை ஏற்பட்டது.
இதனால் கீழே விழுந்த ஹரிஹரன் பின்பு எழுந்திருக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடந்த நிறுவன உரிமையாளர் மீரா துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று தகவலை தெரிவித்துள்ளார்.
பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்ஸ் வரவைத்து பரிசோதித்ததில் சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் உயிரிழந்தது தெரியவந்தது.
பின்னர் துரைப்பாக்கம் போலீசார் ஹரிஹரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதை தொடர்ந்து கொலை செய்த தரணிதரனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது கொலைக்கான காரணம் குறித்து தெரிய வந்தது.
ஒரே நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்த தரணிதரணின் முன்னாள் காதலியிடம் ஹரிஹரன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தரணிதரன் துரைப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள டாஸ்மாக் சென்று மது அருந்திவிட்டு மீண்டும் ஹரிஹரணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது ஹரிஹரனும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் மது போதையில் இருந்த நிலையில் வாக்குவாதம் சிறிது நேரத்தில் கை களப்பாக மாறியதும் மது போதையில் இருந்த தரணிதரன் ஹரிஹரணின் நெஞ்சு மற்றும் வயிற்றில் பலமாக அடித்துள்ளார்.
அதில் நிலைகுழைந்து போன அவர் சம்பவ இடத்திலே சரிந்து விழுந்துள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் எழுந்திரிக்காத நிலையில் பயத்தில் நிறுவன உரிமையாளருக்கு தரணிதரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சண்டை நடைபெற்ற சம்பவத்தை கூறியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் இச்சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்