திருப்பத்தூர் மாவட்டம் அருகேயுள்ள வாணியம்பாடி தடுப்பணையில் நேற்று விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்போது வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கி பலி..,
இதற்கு முன் விநாயகர் சிலை கரைக்க செல்லும் பொழுது வாலிபர் பூவரசன் நீரில் மூழ்கி இறந்த நிலையில் மேலும் ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில்.., கிராம பகுதிகளில் மூன்று நாள் திருவிழா முடிந்ததும் விநாயகரை நீர் நிலைகளில் கடலில் கரைக்க எடுத்து சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் அருகேயுள்ள வாணியம்பாடி கிராமத்தில் நேற்று அப்பகுதியில் உள்ள விநாயகர் சிலைகளை “வாணியம்பாடி தடுப்பணையில்” கரைபதற்காக எடுத்து சென்றுள்ளனர்.
அப்போது விநாயகரை கரைபதற்காக நீரில் இறங்கிய வாலிபர் முரளி ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.., நேற்று விநாயகர் சிலை கரைக்கச் சென்றபோது நீரில் மூழ்கிய “இளைஞர் முரளி” இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..