பள்ளி பேருந்து ஓட்டுனரால் இருசக்கர வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோகம்..! பரபரப்பான மயிலாடுதுறை..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏவிசி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பூம்புகார் மீனவ கிராமம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஏகமூர்த்தி மகன் வினோத்(18).
மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அதே கல்லூரியில் படிக்கும் ஜெகதன் (18), மூவலூர் ஏழுமலையான் ஐடிஐயில் படிக்கும் மாணவன் ஜெகதீஷ் (18) ஆகியோருடன் (ஸ்கூட்டி மாடல்) ஓர் இருசக்கர வாகனத்தில் பூம்புகார் சாலை வழியாக மன்னம்பந்தல் கல்லூரிக்கு வந்துள்ளனர்.
அப்பொழுது மணக்குடி என்ற பகுதியில் முன்னே சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த ஈச்சர் மினிலாரியில் இருச்சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தை ஓட்டி வந்த மாணவன் வினோத் மினி லாரியின் முன்பக்கத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஜெகதன், ஜெகதீஷ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர்த்தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த செம்பனார்கோவில் போலீசார் விபத்தில் உயிரிழந்த மாணவன் வினோத்தை 108 வாகனம் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த மாணவன் வினோத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தலையில் அடித்துக் கொண்டும், தரையில் உருண்டு பிரண்டும் கதறி அழுதது அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும், ஈச்சர் மினி லாரியை ஒட்டி வந்த திண்டுக்கல் பகுதி சேர்ந்த விஜயன் (28) என்பவரையும், மினி லாரியையும் போலீசார் செம்பனார்கோவில் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல் இருந்ததே உயிரிழப்பிற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்