நூல் மில்லில் சிக்கி மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்..!
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் வீரம்மாள். 63 வயதாகும் இவா் கடந்த பல ஆண்டுகளாக வெள்ளக்கோவில் ரெட்டிவலசில் உள்ள மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான நூல் மில்லில் பணியாற்றி வந்தாா்.
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது இடது கை திடீரென இயந்திரத்தில் சிக்கி உள்ளே இழுக்கப்பட்டது. இதில் கை முழுவதும் நசுங்கி, தலையிலும், தோள் பட்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வீரம்மாள் உயிரிழந்தாா்.
இது குறித்து வீரம்மாள் மகள் மாலதி கொடுத்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த வெள்ளக்கோவில் போலீசார் மில் உரிமையாளா் மகேஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
-பவானி கார்த்திக்