திரிஷா நடித்துள்ள “தி ரோட் ” படத்தின் டிரைலர் வெளியானது..!
தென்னிந்திய பிரபலமான நடிகை திரிஷா ,நடித்துள்ள தி ரோட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் அருண் வசீகரன் இயக்குகிறார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதைக்களம் கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் என்றும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். “தி ரோட்” திரைப்படம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், “தி ரோட்” படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. திரில்லர் வடிவில் உருவாகியுள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-சரஸ்வதி