ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. வழக்கம் போல் மும்பையில் இருந்து ஜோத்பூர் வரை சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது இந்த விபத்து ராஜ்கிய்வாஸ்- போம்த்ரா இடையே நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தால் 8 பேட்டிகள் தடம் புரண்டதாகவும் 11 பெட்டிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளை மாற்று ரயில் மூலம் பயணிக்க வைத்துள்ளதாவாகும் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பயணி ஒருவர் கூறுகையில், மார்வார் சந்திப்பிலிருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களில் ரயில் விபத்துக்குள்ளானது. சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கையில் 8 பெட்டிகள் தடம் புரண்டும் சில பெட்டிகள் சேதமடைந்தும் இருந்தது உடனே இந்த விபத்து குறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விபத்து நடந்த 15 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்தது என்று அவர் கூறினார். மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று ரயில்வே தெரிவித்தவுள்ளது.