மீண்டும் இயக்கப்படும் இரயில் சேவை..!! மாற்றப்பட்ட வழித்தடங்கள்..!! தொடரும் மீட்பு பணி..!!
கடந்த அக்டோபர் 11ம் தேதி இரவு மைசூரில் இருந்து ஆந்திரா வழியே தர்பங்கா செல்லும் “பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்” சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் எண் (12578), மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு புறப்பட்ட இந்த பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ் அன்று இரவு 8.27 மணியளவில் கவரைப்பேட்டையை வந்தடைய வேண்டிய நிலையில் கால தாமதமாக இரவு 9.24 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது.
அப்போது தண்டவாளத்தில் சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் மீது பின்புறத்தில் அதிவேகமாக வந்து மோதியதில் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது.. அதில் விபத்தில் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் சில பெட்டிகளில் தீ பற்றியுள்ளது.. அதே சமயம் பயணிகள் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. மற்றும் மூன்று பெட்டிகள் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், 2 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உருக்குலைந்துள்ளது
அதன் பின் சீரமைப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டு நேற்று மாலையே இரண்டு தண்டவாளங்களில் புரண்டு கிடந்த இரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தினர்.. விபத்து நடந்த அன்று இரவு காயமடைந்த 19 பேரில் மூன்று பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் 4 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் 12 பேர் கவரைபேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
தொடர்ந்து இரண்டு நாட்களாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஒருபக்கம் இரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு இரயில் ஓட்டம் நடைபெற்றதை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் இரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளது.. அதேபோல் மின்சார இரயில் சேவையானது பொன்னேரியில் இருந்து நாளை முதல் இயக்கபடும் எனவும் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில் சேவைகள் திருவள்ளூர் வழியே செல்லும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..