“நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 20 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி”… முதல்வர் கையேழுத்திட்ட சூப்பர் திட்டம்..!
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக சில தினங்களுக்கு முன்பு எமிரேட்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றிருந்தார்.
அமேரிக்கா சென்ற முதல்வருக்கு அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மிகுந்த வரவேற்ப்பை அளித்தனர்.
நேற்று பிரான்சிஸ்கோவில் நடைப்பெற்ற் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்கள் முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தநிலையில் இன்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள்,கூகுள் நிறுவனங்களை பார்வையிட்டார். அதனைதொடர்ந்து கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலமாக “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 20 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் மேலும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை விருவுபடுத்துவது குறித்தும் அலோசனை மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது
-பவானி கார்த்திக்