ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தும் திருநங்கைகள்…? கண்கலங்க வைக்கும் நிகழ்வு..!!
வீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்திய திருநங்கைகள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், தண்டராம்பட்டு, ஆரணி, செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 350க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஒப்பாரி வைத்து தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என திருநங்கைகள் நூதன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 37 மாவட்டங்களில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் வீடு கட்டி வழங்கியுள்ளதாகவும், ஆனால் இம்மாவட்டத்தில் வசித்து வரும் தங்களுக்கு இதுவரை வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், உடனடியாக தங்களுக்கு வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர்.
பெற்றோர்கள் வீட்டை விட்டு எங்களை வெளியேற்றிய பின்னர் எங்களுகென்று தனி வீடோ.., இடமோ கிடையாது.., எங்களின் தேவைகளை நாங்கள் தான் பூர்த்தி செய்து கொண்டு இருக்கிறோம்.., மூன்றாம் பலினதாரக இருக்கும் நாங்கள் நம்பி இருப்பது தமிழ்நாட்டை மட்டுமே.., தாய் நாடு மீது நம்பிக்கை வைக்கும் எங்களுக்கு, வாழ்வாரதாரதிற்காக ஒரு வீடு வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..