போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..! முன்வைத்த 5 கோரிக்கைகள்..!
எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காணவில்லை என்றால், தமிழகம் முழுவதும் ஒரு பிரம்மாண்ட அளவில் இயக்கத்தை திட்டமிட உள்ளோம், இதன் மூலம் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கின்ற அளவுக்கு ஒரு இயக்கத்தை திட்டமிட உள்ளோம், தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வு பெற்ற நலச்சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரராகவன் பேட்டி அளித்துள்ளார்.
நவம்பர் 2015 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவைகள் வழங்க வேண்டும்.
மருத்துவப்படி 100ஐ 300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்
குறைந்தபட்ச ஓய்வூதியம் ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 7850 அமல் படுத்த வேண்டும்
ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
2003 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன்பு தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்..
பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை பொது செயலாளர் வீரராகவன் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் இன்று கிட்டத்தட்ட 15 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. 104 மாதங்கள் டி ஏ நிலுவைத் தொகை வழங்காமல் எங்களை ஏமாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் வேலை செய்யக்கூடிய அனைத்து துறைகளிலும் உள்ளவர்கள் இது கிடைத்துவிட்டது,
ஆனால் எங்களுக்கு மட்டும் 104 மாதங்கள் டி ஏ உயர்த்தாமல் நிலுவையில் உள்ளது, இந்த செயல் எங்கள் வாழ்க்கையில் மிகவும் சோகமானதாக இருக்கிறது..
கிட்டத்தட்ட 88 ஆயிரம் தொழிலாளர்கள் இன்றைய நிலவரப்படி ஓய்வு பெற்றுள்ளார்கள், இதில் 33,000 பேர் 10,000 குறைவாக பென்ஷன் வாங்குபவராக இருக்கிறார்கள்.
மருத்துவ காப்பீடு திட்டத்திலும் சரியான திட்டம் இல்லை, ஜெயலலிதா பென்ஷன் என்ற ஒரு திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும். எனவே இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்க்க வேண்டும் என தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுகிறோம்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..