ADVERTISEMENT
காரசாரமான கோழிக்கறி பழுப்பு அரிசி சூப்…
இந்த கோடையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பும் வகையில் சுவையான மற்றும் ஆரோக்கியம் மிகுந்த கோழிக்கறியில் சூப் செய்து கொடுங்க…
தேவையானப் பொருட்கள்:
• கோப்பை (200 கிராம்) சமைத்த பழுப்பு அரிசி
• மேசைக்கரண்டி சிகப்பு கறி பேஸ்ட்
• 100 மில்லிலிட்டர் குறைந்த கொழுப்புள்ள தேங்காய்ப் பால்
• 100 மில்லிலிட்டர் குறைந்த கொழுப்புள்ள பால்
• 100 மில்லிலிட்டர் தண்ணீர்
• 1 வெங்காயம், நான்காக வெட்டவும்
• 1 கட்டை விரல் அளவு நறுக்கிய இஞ்சி
• 1 பச்சை குடைமிளகாய், பெரிதாக வெட்டவும்
• 1 நறுக்கிய கேரட்
• 2 சரிபாதியாக வெட்டப்பட்ட தக்காளி
• 200 கிராம் கொழுப்பற்ற கோழி
• 3 மேசைக்கரண்டி பெரிதாக நறுக்கப்பட்ட பச்சைக் கொத்தமல்லி தழை அல்லது
1 மேசைக்கரண்டி உலர்ந்த கொத்தமல்லி விதை
• 3 நறுக்கிய எலுமிச்சை இலை
செய்யும் முறை:
1. சூடான பாத்திரத்தில், கறி பேஸ்ட், வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து, 1 நிமிடத்திற்கு வறுக்கவும்.
2. கோழித்துண்டுகள், காய்கறிகள், தேங்காய்ப்பால், பால் மற்றும் தண்ணீரைப் பாத்திரத்தில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, கொதிக்க விடவும்.
3. குறைவான வெப்பத்தில் 10-15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும், அல்லது கோழி முழுமையாக வேகும்வரையில் மற்றும் காய்கறிகள் நன்றாக வதங்கும் வரையில் சமைக்கவும்.
4. பிறகு பாத்திரத்தில் சாதம், கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை இலைகளைச் சேர்த்து, குறைவான வெப்பத்தில் 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
5. சூடாகப் பரிமாறவும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.