உலகின் மிக பெரிய பணக்காரர்களுள் ஒருவரான எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். வாங்கிய முதல் பல்வேறு அதிரடி நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். இப்பொழுது வெரிஃபைட் டிக் கள் மூன்று நிறத்தில் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டல்லர்களுக்கு வாங்கிய பின் அதில் வெரிஃபைட் டிக் பெற 8 அமெரிக்கா டாலர்கள் சந்தா கட்ட வேண்டும் என்று அறிவித்தார் இதற்கு பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதில் அவர் பின்வாங்காமல் அமல்படுத்தினார். தற்போது அந்த வெரிஃபைட் டிக் கள் மூன்று நிறத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
அவர் அறிவிப்பில், வெரிஃபைட் கணக்குகள் டிக் வசதி மூலம் கண்டறியபடுகிறது. இந்நிலையில் இதற்கு மூன்று நிறங்கள் வழங்கபட உள்ளது அவைகள், நிறுவனங்களுக்கு கோல்டன் நிற டிக் களும் அரசாங்க சார்ந்த கணக்குகளுக்கு கிரே நிற டிக் கள் மற்றும் பிரபலங்கள், மற்றவர்களுக்கு ப்ளூ நிற டிக் கள் வழங்கபடும் என்று அறிவித்துள்ளார். இந்த திட்டம் அடுத்த மாதம் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.