தமிழ் திரையுலகில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த திரை ஜோடி விஜய் – திரிஷா. இவர்கள் இருவரும் முதன்முறையாக 2004ம் ஆண்டு கில்லி படத்தில் நடித்தனர். தொடர்ந்து, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களிலும் கடைசியாக லியோ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா GOAT படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கருத்துவேறுபாடு கொண்டிருப்பதாக ஏற்கனவே தகவல் உண்டு. இதற்கிடையே, நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் மற்றும் திரிஷா இருவரும் தனி விமானம் மூலம் கோவா சென்று வந்தனர். மனைவியை உடன் அழைத்த செல்லாமல் திரிஷாவை விஜய் அழைத்த சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு, கில்லி பட சமயத்திலிருந்தே விஜய் மற்றும் திரிஷா இருவரும் நல்ல நண்பர்கள். இருவருக்குமே கீர்த்தி சுரேஷ் நல்ல நண்ப்ர். இதனால், ஒன்றாக சென்றுள்ளனர். இதில், தவறு ஒன்றும் இல்லையே என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் தக் லைஃப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியின் போது, கமல்ஹாசன், சிலம்பரசன் முன்னிலையில் திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திரிஷா, ‘நீங்கள் கல்யாணத்தை பற்றி என்னிடத்தில் கேட்டால் நான் ஒன்றுதான் சொல்ல முடியும். எனக்கு திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லை. கல்யாணம் நடந்தாலும் சரி நடக்காவிட்டாலும் சரி. அது குறித்து கவலை இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷாவும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள நினைத்தார். தொழிலதிபர் வருண் மணியனை காதலித்தார். பிரமாண்டமாக நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால், இருவரும் நிச்சயதார்த்த துடன் தங்களது உறவை முறித்துக் கொண்டனர். திரிஷா திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக சினிமாவில் நடிக்க விரும்பியதாகவும் ஆனால் மணமகன் தரப்பில் பச்சைக்கொடி காட்டவில்லை . இதனால், இந்த திருமணம் நின்று போனதாக கூறப்படுகிறது.