நயன்தாரா இடத்தை பிடித்த த்ரிஷா..! உற்சாகத்தில் ரசிகர்கள்..! பிளாக் பஸ்டர் ஹிட்..!
லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.ஐயா திரைப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமான இவர் இன்றுவரை முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வித்தியாசமான கதையம்சங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் விஜய், ரஜினி, சூர்யா போன்ற முன்னனி நடகர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
ஆனால் சமிபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அன்னபூரனி திரைப்படம் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இனி நடிக்க இருக்கும் திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.
கடந்த 2020ம் ஆண்டு என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடவுள் பக்தியை மையமாக கொண்டு உருவாக்கிய இப்படத்தில் நயன்தார் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதையை எழுதியதோடு மட்டுமல்லாமல் முன்னணி கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார்.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்று வெற்றி பெற்ற இப்படம் நயன்தாரா, ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரின் எதார்தமான நடிப்பால் பலரது பாரட்டை பெற்றது.
மூக்குத்தி அம்மன் பாகம் இரண்டு :
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்திற்கான வேலைகள் தற்போது துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என கூறுகின்றனர்.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக தமிழ் சினிமாவி்ன் முன்னனி நடிகையான திரிஷா அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார். என புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
– பவானி கார்த்திக்