‘இனி வணக்கம் மட்டும் தான்’ டிரம்ப் எடுத்த திடீர் முடிவு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அயர்லாந்து அதிபர் லியோ வரத்கர் ஆகியோரின் சந்திப்பின் போது இருவரும் கை குலுக்காமல் இந்திய முறைப்படி ஒருவருக்கொருவர் வணக்கம் வைத்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பலரும் கைகுலுக்க கூட மறுக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அயர்லாந்து அதிபர் லியோ வரத்கர் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது கொரோனா‌ அச்சுறுத்தல்‌ காரணமாக இருவரும் கை குலுக்கவில்லை.

அதற்கு பதிலாக இருவரும் இந்திய முறைப்படி ஒருவருக்கொருவர் வணக்கம் வைத்தனர். இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், ” நாங்கள் இருவரும் கை குலுக்கவில்லை. அந்த நேரத்தில் எங்களுக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு இருந்தது. நான் சமீபத்தில் தான் இந்தியா சென்று வந்தேன். அங்குதான் வணக்கம் வைக்கும் முறையை கற்றுக்கொண்டேன். அது மிகவும் எளிதாக உள்ளது. இந்திய சுற்றுப் பயணத்திற்கு பிறகு கை குலுக்‌குவதற்கு பதிலாக கை கூப்பி வணங்குவதை தான் பின்பற்றி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

What do you think?

‘கொரோனவால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு’ ரசிகர்கள் அதிர்ச்சி!

‘கொரோனா பரவுவதால் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை’ மாநில அரசு அதிரடி!