மத சுதந்திரம் பற்றி டிரம்ப் மோடியிடம் பேசுவார் – வெள்ளை மாளிகை

இந்தியா வரும் டிரம்ப் பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி பேசுவார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை (பிப்-23) இந்தியா வருகிறார். இதையொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான, நீடித்த உறவின் காரணமாக அதிபர் டிரம்ப் இந்தியா செல்ல உள்ளதாக தெரிவித்தார். ஜனநாயக மரபுகள், பொதுவான பாதுகாப்பு நலன்கள், இரு தரப்பு மக்கள் இடையேயான நீடித்த பிணைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாட்டு உறவு அமைந்துள்ளதாக தெரிவித்தார்”.

அப்போது அவரிடம், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு டிரம்ப் திட்டமிட்டு இருக்கிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “தனியாக சந்திக்கும்போது நிச்சயமாக பேசுவார்” எனத் தெரிவித்தார். மேலும், “இந்தியா தனது ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்த வேண்டும், மத சிறுபான்மையினருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று உலகம் எதிர்பார்ப்பதாகவும்” அவர் கூறினார்.

What do you think?

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியன் 2 விபத்து; கிரேன் ஆப்ரேட்டருக்கு ஜாமீன்