டிரம்ப் வருகை : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி 4 கேள்விகள்…!

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரனதீப் சுர்ஜேவாலா, அதிபர் டிரம்புடனான சந்திப்பின்போது, எச் 1பி பிரச்சனை, இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து, பிரச்சனைகளை பிரதமர் மோடி எழுப்புவாரா என வினவினார்.

அமெரிக்காவின் நெருக்கடியால் ஈரானிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதால், குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களை வாங்குவது குறித்து மோடி பேசுவாரா, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என டிரம்ப் கூறி வரும் நிலையில், இந்தியர்களுக்கே முன்னுரிமை என முழக்கத்தை மோடி முன்னெடுப்பாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தாலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதால், இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மோடி, டிரம்புடன் பேசுவாரா என சரமாரியாக ரனதீப் சுர்ஜேவாலா வினவியுள்ளார்

What do you think?

லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி…!

அச்சு அசலா ஜெ. போன்றே இருக்கும் கங்கனா…!