குழந்தைக்கு ஆரோக்கியமான தலை குளியலுக்கு இதை ட்ரை பண்ணுங்க..!!
பிறந்த குழந்தையில் இருந்து 10 வயது குழந்தை வரை எந்த வயது குழந்தினரும் பயன் படுத்தும், குளியல் எண்ணெய் பொடி, வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம். இதனால் அவர்களின் மென்மையான சருமம் பாதுகாக்கப்படும்.
குளியல் எண்ணெய் :
தேவையான பொருள்கள் :
- காய்ந்த ரோஜா இதழ்கள்
- மகிழம் பூ,
- ஆவாரம் பூ,
- வெட்டி வேர்,
- துளசி இலை,
- நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு.
தயார் செய்யும் முறை :
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய், மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும் , அதில் காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து சூடு படுத்தவும், சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளும் எண்ணெயில் காயவைத்த மகிழம் பூ, ஆவாரம் பூ, வெட்டி வேர் மற்றும் துளசி இலைகளை போட்டு காயவைக்கவும்.
இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து அந்த எண்ணெய் வடிகட்டி எடுத்து குழந்தைகளுக்கு குளியல் எண்ணையாக பயன் படுத்தலாம்.
- இந்த எண்ணெய் குழந்தைகளுக்கு தலைக்கு குளிக்க வைக்கும் முன், எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்தால், உடல் தசைகள் வலுவு பெரும்.
குளியல் பொடி :
தேவையான பொருள்கள் :
- காய வைத்த ரோஜா இதழ் பொடி,
- கஸ்தூரி மஞ்சள்,
- அரிசி மாவு,
- பாசிப்பயிறு மாவு,
- ரோஸ் வாட்டர்.
செய்முறை :
கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ் போடி, அரிசிமாவு, பாசிப்பயிறு சமஅளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ரோஸ் வாட்டர் தேவையான அளவு கலந்து மிஸ் செய்ய வேண்டும்.
- குழந்தைகள் குளிக்க வைத்த பின் இந்த பொடியை தேய்த்து குளிக்க வைத்தால், சருமம் அழகாகும் என்றும் மென்மையாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..