பெண்களின் முகத்தில் வளரும் முடி..! நீங்க இதை ட்ரை பண்ணுங்க..!!
ஒரு சில பெண்கள் மட்டும் இல்லாமல் பெரும்பாலான பெண்களுக்கு கன்னங்கள், உதட்டின் மேல்புறம் மற்றும் தாடை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்களை போலவே முடி வளருகிறது. இது அழகை கெடுப்பதோடு, தன்னம்பிக்கையை குறைக்கவும் செய்யும்.
இது இயற்கையானது என்றாலும் பெண்கள் அவற்றை விரும்புவது இல்லை. இப்படி சருமம் மற்றும் முகத்தில் வளரும் முடிகளைசாதரண இயற்கையான பொருட்களை கொண்டு நிரந்தரமாக அகற்றலாம்.
இதற்கு 1ஸ்பூன் தேனுடன், 2ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன், முடிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முற்றிலுமாக மறையும்.
முகப்பொழிவுக்காக பெரும்பாலும் கடலை மாவை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் முடி வளர்ச்சியை தடுக்கும் எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள் உள்ளது.
2ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2ஸ்பூன் ரோஸ்வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மறையும்.
சோளம் மாவு உடன், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் சர்க்கரை கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து, முடி உள்ள இடத்தில் மாஸ்க் போல் அப்ளை செய்து பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால், முடிகள் நீங்கும்.
பப்பாளி பழத்தின் தோலை நீக்கிவிட்டு அந்த பழத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
சுமார் 20நிமிடங்கள் கழித்து கழுவினால் முடிகள் நீங்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால், முடிகள் நீங்குவதோடு, சருமம் பளபளப்பாக மாறும்.
சத்யா.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..