வீசிங்கை கட்டு படுத்த இதை ட்ரை பண்ணுங்க..!!
வீசிங்கை கட்டுப்படுத்தும் முசுமுசுக்கை பயன்கள் பற்றி ஒரு சிறு தொகுப்பு பார்க்கலாம் வாங்க…
சுக்கை என்கிற முசுமுசுக்கை மூலிகையை சித்தர்கள் வந்து இது “ஆஞ்சநேயர் கை” என்று அழைப்பார்கள்.
1. இதன் இலை காசம், கோழை, சுவாசக் கோளாறுகள், புகைகம்மல் ஜலதோஷம், இது எல்லாத்தையும் சரி பண்ற தன்மை இருக்குன்னு சொல்றாங்க.
2. அது மட்டும் இல்லாமல் வீசிங்கை கட்டுப்படுத்தும்னு சொல்லப்படுது.
3. இந்த இலை எங்க இருக்குன்னா செம்மண் மற்றும் கரும்பு தோட்டங்களில் வளரும்னு சொல்லப்படுது.
4. அதே மாதிரி பனிக்காலத்துல நமக்கு சுவாச கோளாறு கூட சரி செய்யும்.
5. வல்லாரைக் கீரை போல இதுவும் ஞாபக சக்திய அதிகரிக்கும் என்று சொல்லிகிறார்கள்.
6. மேலும் மூளையை பலப்படுத்தும்.
இந்த இலைகளை பறித்து லேசாக இடித்து ரசம் வைத்து நாம தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டா பக்கவாதம், பித்த நோயெல்லாம் சரியாகும்.
இதுல சுண்ணாம்பு சத்து அதிகரிப்பதால் எலும்புகள் பலம் பெறும்.
இந்த முசுமுசுக்கை இலைகளை நீங்கள் செய்து அரைத்து தோசையுடன் மிக்ஸ் பண்ணி அட மாதிரி கூட சாப்பிட்டு வரலாம்னு சொல்லுறாங்க.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..