அழகான கூந்தல் பெற இதை ட்ரை பண்ணுங்க..!!
சருமத்தை அழகாக வைத்துக் கொள்வதில் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறோமோ அதே அளவிற்கு கூந்தலை அழகாக வைத்துக் கொள்வதிலும், நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கான சில டிப்ஸ்..!!
* புரதச்சத்து, ஜிங்க், காப்பர் மற்றும் இரும்புச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* பழங்கள், நெல்லிக்காய் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* வெந்தயத்தை நன்கு ஊறவைத்து, அரைத்து அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, துளசி பொடி மற்றும் முட்டை சேர்த்து ஒன்றாக கலந்து அதை பூந்திக்கொட்டை ஊறவைத்த தண்ணீரில் இதை சேர்த்து தலையில் தடவ வேண்டும்.
* ஒரு மணி நேரம் தலையில் ஊறிய பின்பு, ஷாம்பூ கொண்டு தலையை அலச வேண்டும்.
* வாரத்திற்கு ஒரு முறை இதை செய்தால் அடர்த்தியான கூந்தல் பெறலாம்.
* அவகேடோ பல சாறு, மசித்த வாழைப்பழம், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு முட்டை ஆகியவற்றை நன்கு சேர்த்து கலந்து தலை முடியின் நுனி வரை, தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதை கண்டீஷனராக பயன் படுத்துவதால். ஷாம்பூ உபயோகிக்காமல் தலையை அலச வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.