குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அதிகரிக்க இதை ட்ரை பண்ணுங்க..!!
குழந்தை வளர்ப்பே ஒரு சாவால் நிறைந்த ஒன்று, அதிலும் அவர்களை சாப்பிட வைப்பது அதைவிட சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுப்பது அவசியம் அதிலும்.., கோடை காலத்திற்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். கோடை காலத்தில் அவர்களுக்கு மிக முக்கியமாக தேவையான சத்து, “நீர்ச்சத்து”. எனவே இந்த உணவை இப்படி ட்ரை பண்ணுங்க
தேவையான பொருள் :
வெள்ளரிக்காய் 1,
தக்காளி 1,
வேக வைத்த ஸ்வீட் கான்,
எழுப்பிச்சை சாறு 3 துளி,
மிளகு தூள் ஒரு பின்ச்
தேன்.
செய்முறை :
அனைத்து காய்கறிகளையும் பொடி, பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் அதனுடன் ஸ்வீட் கான், எலும்பிச்சை சாறு மற்றும் பின்ச் மிளகு மற்றும் பின்ச் உப்பு சேர்க்கவும். அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து வெஜ் சாலட் ஆக குழந்தைக்கு கொடுக்கலாம்.
வெள்ளரி, தக்காளி மற்றும் கான் நீர்ச்சத்து நிறைந்த பொருளாக இருந்தாலும், அனைத்து குளிமை பொருளும் சேரும் பொழுது சளியை உண்டாக்கும். அதை தடுக்க மிளகு சேர்த்துக்கொண்டால் சளியும் மார்பில் தங்காது.
தேனை விட சிறந்து மருத்துவம் நிறைந்த உணவு பொருள் வேறு எதிலும் கிடையாது, தேன் கலந்து கொடுத்தால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் புரதச்சத்து, மாவுச்சத்து அனைத்தும் கிடைக்கும்.
நாள்முழுவதும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..