மாதவிடாய் வலியை போக்க இதை ட்ரை பண்ணுங்க…!!
தினமும் பூண்டு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி பூண்டை பச்சையாகவோ அல்லது சமைத்து சாப்பிடுவதைவிட தண்ணீரில் பூண்டு குடிப்பது அதிக நன்மை பயக்கும்.
அந்த வகையில் தினமும் பூண்டு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் செரிமான ஆரோக்கியம்… செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பூண்டு தண்ணீரை குடித்தால் அஜீரணம் வயிற்று வலி வாயு பிடிப்பு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் முற்றிலும் குணமாகும்.
பூண்டு நீர் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.. மற்றும் உயர் ரத்த சர்க்கரை உடன் தொடர்புடைய சிக்கல்களின் அபாயத்தை குறைக்கிறது.
பூண்டு மாரடைப்பு ரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால் அபாயத்தை குறைக்க உதவும்
சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற சுவாச அறிகுறிகளை குறைக்க பூண்டு உதவும்.
பூண்டு வீக்கத்தை குறைக்கவும் மற்றும் ரத்த நாளங்களை பாதுகாக்கவும் உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பொதுவானது.
அத்தகைய நேரங்களில் அதிகாலையில் பூண்டு தண்ணீர் குடித்தால் ரத்த ஓட்டத்தை சீராகும் வயிற்று வலியை குறைக்கும்.
பூஞ்சை எதிர்ப்பு வைரஸ் எதிர்ப்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள பூண்டு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பூண்டு எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
பூண்டு ஒரு இயற்கை நச்சு நீக்கி ஆகும்.
பூண்டு வயிற்று மற்றும் பெருங்குடல் போன்ற குறிப்பிட்ட வகையில் புற்று நோய்களை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.