சிசுவை தாயின் கருவரையில் இல்லாமல் தனியாக வெளியே வைத்து வளர்க்கும் தொழிற்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. அதற்கான மாதிரி வீடியோ ஒன்றை Ecto Life என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த உலகம் நாளுக்கு நாள் அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளால் தொடர்ந்து அடுத்த நிலைக்கு நகர்ந்து சென்று கொண்டே உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நம் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத பலவகை தொழிற்நுட்பங்கள் இன்று நடைமுறையில் இருக்கிறது அடுத்த 50 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடவிருக்கிறது என்பதை கூட யூகிக்க முடியதா அசூர வளர்ச்சி அடைந்து வரும் இந்த உலகம் புதிய தொழிற்நுட்பத்திற்கும் தயாராகி வருகிறது. உலகம் தோன்றிய முதல் இன்று வரை அணைத்து உயிரினங்களும் தன் தாயின் கருவரையில் உருவாகித்தான் முதலில் இந்த உலகத்திற்கு அறிமுகமாகும். எவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் இதில் எந்த மாற்றத்தியும் ஏற்படுத்த முடியாது என்று தான் அனைவரும் கூறி இருப்பார்கள். ஆனால் Ecto Life என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தாயின் கருவறையின்றி சிசுவை வெளியே வைத்தே வளர்க்கும் புதிய தொழிற்நுட்பத்தை கண்டறிய முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்தான தகவலில் EctoLife, உலகின் முதல் செயற்கை கருப்பை வசதியை அறிமுகப்படுத்துகிறது, இது முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கர்ப்ப சிக்கல்களால் சுமார் 300,000 பெண்கள் இறக்கின்றனர், இதனை குறைக்கும் நோக்கில் இந்த தொழிற்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொழிற்நுட்பம் உங்கள் குழந்தையை தொற்று இல்லாத சூழலில் உருவாக்க அனுமதிக்கிறது, அவற்றின் மேற்பரப்பில் கிருமிகள் ஒட்டாமல் தடுக்கும் பொருட்களால் செய்யப்படுகின்றன. இதயத் துடிப்பு, வெப்பநிலை, இரத்த அழுத்தம், சுவாச வீதம் மற்றும் ஆக்ஸிஜன் செறிவு உள்ளிட்ட உங்கள் குழந்தையின் முக்கிய அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் உள்ளன. குறிப்பாக இந்த செயற்கை கருப்பை மூலம் உங்கள் ககுழந்தைகளுக்கு அவர்கள் உயரம், கண் நிறம், முடி நிறம் மற்றும் புத்திசாலித்தனம் வரை அனைத்தையும் தீர்மானிக்க முடியும். என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது