பாரத அடையாளத்தை அழிக்க முயற்சி..!! ஆளுநர் ரவிக்கு ஆயர் பேரவை கண்டனம்..!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தைகளை பதிவிட்டு வருவதாக கூறி தமிழக ஆயர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள P.S. கல்விக் குழுமத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்திருந்தார்.. அப்போது அவர் பேசியதாவது
“ஆங்கிலேய அரசாங்கமானது கிறிஸ்தவ மிஷினரிகளுடன் இணைந்து பாரதத்தின் அடையாளத்தை அழிக்க செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.. “, “பாரதத்தின் உணர்வை குறைப்பதற்காக இந்திய கல்வி முறையை அழித்து வருவதாக அவர் கூறியுள்ளார்..
மேலும் “நம்முடைய செல்வங்களையும், கலைப் பொக்கிஷங்களையும் திருடிச் சென்று விட்டனர் எனவும், “நமது நாட்டில் உள்ள மக்களுக்குத் தவறான ஓர் அடையாளத்தை உருவாக்க, வரலாற்றைத் திரித்து தவறான வரலாற்றைப் புகுத்தினர் இது நன்குத் திட்டமிடப்பட்ட ஒரு சதி செயல்” என்றும் பொய் பிரச்சாரம் பரப்பியிருக்கிறார்..
இதுகுறித்து ஆயர் பேரவை அவைதலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.., “ஆங்கிலேய அரசானது கிறிஸ்தவ மிஷினரிகளுடன் இணைந்து பாரதத்தின் அடையாளத்தை அழிக்க செயல்படுவதகாவும்
பாரதத்தின் உணர்வை குறைப்பதற்கு இந்திய கல்வி முறையை அழித்து வருவதாகவும் தன்னுடைய பொய் பிரச்சாரங்களை முன் வைத்து பேசியுள்ளார்..
சிறுபான்மையின மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.. அவரின் அந்த பேச்சு சிறுபான்மையினர் சமூகத்தின் மீதும் சமய சார்பற்ற இந்திய மக்கள் மீதும் தனக்கு இருக்கும் வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாகப் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்…
நாட்டு மக்களிடம் தவறான ஓர் அடையாளத்தை உருவாக்குவதற்காக, தன்னுடைய வரலாற்றைத் திரித்து தவறான எண்ணங்களை திணித்து வருகிறார்.. இது நன்குத் திட்டமிடப்பட்ட ஒரு சதி செயல்” என்று பொய் பிரச்சாரம் செய்துள்ளார்…
ஆளுநரின் இந்த பேச்சுக்கள் நமக்கு புதிதல்ல., அவர் பேசிய அனைத்து எதோ நோக்கத்துடன் பேசியது போல் இருக்கிறது…
ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவர்களும் ஓரணியாக இருப்பதாகவும் மற்றவர்கள் எதிர் அணியை போல செயல்படுவதாக கூறுவது முற்றிலும் கண்டிக்க வேண்டிய ஒன்று.. நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கும் மாநில அரசுடன் இணைந்துச் செயல்பட வேண்டிய ஒரு ஆளுநர் பொய்யான தகவல்களையும் பொய் பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகிறார்.. சிறுபான்மையினரையும் சமூகத்தையும்., இழிவுபடுத்தி பேசுவது வெட்கத்துக்குரிய ஒன்று.
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மதம்., பார்த்து பழகுவத்தில் பிற மதத்தினாரோடு பழகும் போது அனைவரும் சகோதர சகோதரியை போல பழகி வருகின்றோம்..
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி., மோதல்களை உருவாக்கி சிறுபான்மையினரின் உரிமைகளையும் மாண்பையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார்.
மிஷினரியினர்கள் ஆற்றும் தொண்டு., கல்வி, முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அவர்கள் ஆற்றும் தொண்று பற்றி எல்லோருக்கும் தெரியும்..
உண்மையை மூடி மறைத்து, பொய் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பேசி, தமிழகத்தில் அமைதியற்ற ஒரு நிலையை ஏற்படுத்தி வரும் ஆளுநர் ரவி அவர்களைக் கிறிஸ்தவர்களின் சார்பாகவும் குறிப்பாகத் தமிழகத்திலுள்ள சிறுபான்மை சமூக மக்களின் சார்பாகவும், நட்புறவோடும் ஒற்றுமையோடும் வாழும் அனைவரின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம். என இவ்வாறே அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..