கேள்வி கேட்ட TTF வாசன்..! இது நியாயமானதா இருக்கே..?
சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாகவும், கவனக் குறைவாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக TN 40 AD 1101 என்ற காரை, செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டியதோடு, அதனை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவுசெய்து Twin Throttlers என்ற ID ல் யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மொபைலில் பேசியபடி, மரணத்தை விளைவிக்கும் வகையில் கார் ஓட்டியதாக டிடிஎஃப் வாசன் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் மதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைது நடவடிக்கையின் போது டிடிஎஃப் வாசன் சொன்ன சில அதிர்ச்சி தகவல்கள் இதோ..
சட்டம் எல்லாருக்கும் ஒன்னு தான்..
அய்யா நான் இப்ப என்ன தப்பு செஞ்சுட்டேனு என்னை கைது பன்னிருக்கிங்க.. ஒரு 23 வயது இளைஞர் வளரக்கூடாதா.. அப்படி-னு கேள்வி கேட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய TTF வாசன்.
மைட் வாய்ஸ்-னு நினைச்சி, வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கு, எல்லோரும் என்னை பார்த்து தான் கெட்டுப் போகிறார்களா என மீடியா பார்த்து கேட்ட கேள்வி பலரை யோசிக்கவைத்துள்ளது.
அவர் சொன்ன இடம் தப்பா இருந்தாலும் அவர் சொன்ன விசயம் சரிதான் என விவாதம் எழுந்துள்ளது,
யாரோட உயிருக்கு நான் பங்கம் விளைவித்தேன் என கேள்வி எழுப்பும் TTF வாசன், PORSCHE காரை வைத்து 2 பேரை கொலை செய்தவனுக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
– ஜெய்முருகன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..