TTF வாசன் கைது..! மேலும் ஒரு வழக்கு..! பரபரப்பான மதுரை..!
சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் சாலையில் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யூடியூப் மூலம் பேமஸ் ஆன யூ டியூபர் டிடிஎஃப் வாசன், ஆபத்தான முறையில் பைக் ஓட்டுவது புது புது பைக் மற்றும் கார் ஓட்டி இந்த கால இளைஞர்களையும் அதற்குள் இழுக்கும் விதமாக வீடியோ போடுவது போன்ற வேலைகள் செய்து வருகிறார்.
இதனால் சில சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பெயரில் கடந்த ஆண்டு ஆபத்தான முறையில் வீலிங் செய்த வழக்கு தொடர்பாக, 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்படி இருந்தும் அடங்காத டிடிஎப் வாசன்.., அவரது கார் மூலமாக ஊரை சுற்றி அதனை வீடியோவாக பதிவு செய்து வந்துள்ளார்.
சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாகவும், கவனக் குறைவாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக TN 40 AD 1101 என்ற காரை, செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டியதோடு, அதனை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவுசெய்து Twin Throttlers என்ற ID ல் யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில், காவல்துறையினர் TTF வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருஇசக்கர வாகனம் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..