பேராசிரியர் காலமான செய்தியறிந்து வருத்தமுற்றேன் – டிடிவி டிவிட்

பேராசிரியர் க.அன்பழகன் காலமான செய்தியறிந்து வருத்தமுற்றேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நிலை பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இன்று அதிகாலை காலமானார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான அவரின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்பழகன் மறைவிற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

What do you think?

‘மரணத்திலும் ஒற்றுமையை கடைபிடித்த தோழர்கள்’ தொண்டர்களை நெகிழ்ச்சியடையவைக்கும் தகவல்!

‘கொரோனாவா, எங்ககிட்ட தான் இது இருக்கே’ வைரலாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் Insta பதிவு!