அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது : டிடிவி குற்றச்சாட்டு

அதிமுக அரசு தமிழக மக்களை ஏமாற்ற நினைப்பதாக அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்துதல் சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது. இச்சட்ட முன்வடிவு விவசாயிகளையும் தமிழக மக்களையும் மீண்டும் ஒருமுறை நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறதோ என்று கருதத் தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு விவாகரத்தில் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்கும் வரை மூடி மறைத்து தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் வஞ்சித்த வரலாறு இவர்களுக்கு இருக்கின்ற நிலையில், இப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான மசோதா, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த சந்தேகங்கள் எல்லாம் உறுதியாகிவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வழக்கம் போலவே அதிமுக அரசு தமிழக மக்களை ஏமாற்ற நினைப்பது அம்பலமாகியிருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் அந்த அறிக்கையின் வாயிலாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

What do you think?

டிக்-டாக் வீடியோ எடுத்த மாணவன் கைது

திருவண்ணாமலை விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்