குழந்தை வரம் தரும் துளசி மாதா..!
ஸ்ரீ பத்ம புராணத்தில் துளசியின் மகாத்மியம் என்று சொல்லப்படுகிறது. தசரத மகாராஜனுக்கு குழந்தைப்பேறு வேண்டி அவர் முதன்முதலில் பட்டத்து ராணிகளோடு துளசி பூஜை செய்துள்ளார்.
அப்போது துளசி தேவியே நேரில் தோன்றி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, உனக்கு பகவானே மகனாக பிறப்பான் என்று வரம் கொடுத்ததாக புராண கதைகளில் சொல்லப்படுகிறது.
எனவே துளசி வழிபாடு என்பது சகல பாவங்களையும் நீக்குவதோடு மட்டுமல்லாமல் குழந்தை வரத்தையும் தருகின்றது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே குழந்தை இல்லாத தம்பதியினர் இந்த துளசி வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
துளசி பூஜை செய்யும் போது மிகவும் கண்டிப்பாக ஸ்ரீகிருஷ்ணன் ஆக கருதப்படும் நெல்லி மரத்தின் கிளையை அருகில் வைத்து செய்ய வேண்டும். தொடர்ச்சியாக பூஜை செய்யப்படும் போது நெல்லி மரக்கிளை வாடிவிடும் என்பதனால் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவுருவப்படமும் பிரதிமையோ வைத்து பூஜை செய்யலாம். நீங்களும் தினசரி துளசி வழிபாடு செய்து பாருங்கள்.
மனதில் மகிழ்ச்சியும் இல்லத்தில் இன்பமும் வாழ்வில் ஒருவித தெம்பும் கிடைப்பதை கண் கூடாக காணலாம். துளசி மாதா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தருவாள்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..