டங்ஸ்டன் சுரங்க திட்டம்…!! மக்கள் மீது வழக்கு..!! திரும்ப உத்தரவு..!!
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மதுரை அரிட்டாபட்டி பகுதியில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும், தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக, இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டது.
இந்நிலையில் இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 ஆயிரத்து 608 பொதுமக்கள் மீது காவல்துறையினரால் மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..