அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் திருப்பம்..! தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்..!!
கடந்த ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக காவேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரின் மனைவி மேகலா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அதிகாரமில்லை என்று மேகலா தரப்பில் வழக்கு ஆரமிக்கப்பட்டது.
எதிர்தரப்பு வாதங்களை முன் வைத்த அமலாக்கத் துறையினர், ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு, செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவே அவரை கைது செய்தோம். என வாதடப்பட்டது.
வாதங்கள் முடிந்த பின், உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானு , பரத சக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
“செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்” என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார். ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி தள்ளுபடி செய்யத மனுவில். செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட கஸ்டடியில் இல்லை சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவலில் வைத்துள்ளதாக என்ன முடியாது என்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது..