பருப்பு துவையல்..!
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் மூன்று
தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன்
வெங்காயம் அரை
உப்பு தேவையானது
எண்ணெய் ஒரு ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் 4 ஸ்பூன் பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்று சேர்த்து வறுக்க வேண்டும்.
அடுப்பை அணைத்து பருப்பு மட்டும் தனியே எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தேங்காயை துருவிக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், வறுத்த காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து அதனை அரைத்த துவையலில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
அவ்வளவுதான் பருப்பு துவையல் தயார்.
இதனை எல்லா சாப்பாட்டுக்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பாக கஞ்சி சாதத்திற்கு சாப்பிட சுவையாக இருக்கும்.