தவெக கொடி யானை சின்னம் விவகாரம்..!! தேர்தல் ஆணையம் அளித்த பதில்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைச் சின்னம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலையிடக்கூடாது என தேர்தல் கமிஷன் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பதில் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.., அதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். அதை தொடர்ந்து கட்சியின் கொடி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது..
ஆனால் அறிமுகப்படுத்த பட்ட பின் பெரும் சர்ச்சைகள் கிளம்ப தொடங்கியது., அதாவது தவெக சார்பில் வெளியான கொடியில் இரண்டு சிகப்பு நிறங்களுக்கு நடுவே ஒரு மஞ்சள் நிறமும் அதில் இருபக்கம் யானைகளுக்கு நடுவே வாகை பூவுடன் கூடிய கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார்..
இந்த கொடியில் உள்ள இரண்டு யானைகள் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை தவெக பயன்படுத்தியுள்ளதாகவும் தேர்தல் விதிமுறையை தவெக மீறி செயல்பட்ட தாகவும் குற்றம் சாட்டினர்..
மேலும் தமிழக வெற்றிக் கழகம் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய 24 மணி நேரத்திலேயே பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சேபனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது..
இதற்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது., அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது.., “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடாது. எந்த ஒரு கட்சியின் கொடிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்குவதோ, அங்கீகாரம் வழங்குவது இல்லை. குறிப்பாக கட்சி கொடிகளில் இடம் பெறும் சின்னங்களுக்கு கூட தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை., ஆனால் அந்த யானையை அவர்கள் தங்களுடைய சொந்த சின்னமாக பயன்படுத்த முடியாது., சின்னமானது தேர்தல் சமயத்தில்., தேர்தல் கமிஷன் அறிவிக்கும்., ஆனால் அதேசமயம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றாலும் கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அவர்கள் உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷன் பதில் அளித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..