வீதிக்கு வாங்க ரஜினி – கலாய்க்கும் நெட்டிசன்கள்

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வீதிக்கு வாங்க ரஜினி என்று நெட்டிசன்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக அமைதியான வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேலும், போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினி, இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறியிருந்தார். இதையடுத்து தற்போது இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்க வருமாறு நெட்டிசன்கள் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். #வீதிக்குவாங்கரஜினி என்ற ஹேஷ்டேக் போட்டு ரஜினியை கலாய்த்து வருகின்றனர்.

What do you think?

சென்னை ஷாஹின்பாக், மெரினா புரட்சி போல் உருவெடுக்க வாய்ப்பு? – முதலமைச்சர் ஆலோசனை

வெளியானது ஜாமியா மாணவர்களை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!