ஒரு வீட்டில் இரண்டு குல தெய்வங்களா..? இவரை தான் முதலில் வணங்க வேண்டுமா..?
குல தெய்வம் என்பவர்கள் நம் குலத்தை காக்கும் தெய்வங்கள். அவர்கள் அருள் இன்றி எந்த ஒரு காரியமும் நம்மால் செய்ய முடியாது என்பது நம் நம்பிக்கையாக இருந்து வருகிறது..,
ஆனால் ஒருவர் வீட்டில் இரண்டு குல தெய்வங்கள் இருப்பார்கள்.., அதாவது அப்பா வழி குலதெய்வம் ஒருவர்.., அம்மா வழி குலதெய்வம் என சில உறவுகள் திருமண பந்தத்தில் அவர்கள் இருவர் மட்டுமின்றி குடும்பம், தெய்வங்கள், வாழ்க்கை வழிமுறை என அனைத்தும் இணைந்துவிடுகிறது..
திருமணம் ஆன பின் பெண்கள் கணவன் வீட்டு குல தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும் என நம் முன்னோர்கள் சொல்லிய ஒன்று.., ஆனால் நாம் குல தெய்வம் மட்டுமின்றி நாம் வணங்கும் இஷ்ட தெய்வங்களும் எப்பொழுதும் நம்மை பின் தொடர்ந்து வருவார்கள்..,
அதிலும் குறிப்பாக பெண் வீட்டின் குல தெய்வங்கள் அவர்கள திருமணம் ஆகி சென்றாலும் அவர்கள் உடன் எப்பொழுதும் அவர்களுக்கு துணையாக இருக்கிறார்கள்.., என்பது ஐதீக உண்மை.
எனவே இருவர் வீட்டு குல தெய்வத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து நாம் வழிபாடு செய்ய வேண்டும்.., அப்படி முறையாக நாம் வழிபட்டால் ஏற்படும் தடங்கல் பிரச்சனைகள் இன்றி குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்..
ஒரு சிலர் அவர்களின் வீட்டிலேயே குலதெய்வத்தை வைத்து வழிபாடு செய்வது உண்டு.., அப்படி வழிபாடு செய்பவர்கள் தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடலாம்.., வாரத்தில் ஒரு முறையாவது குல தெய்வத்திற்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்யலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..