அரிசி கொம்பன் யானையை பிடிப்பதற்கு கோவை மாவட்டம் வால்பாறை டாப்சிலிப்பில் கோழி கமுதியில் இருந்து சுயம்பு, முத்து ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த கும்கி யானைகள் இன்று இரவு 7 மணிக்கு கோழிகமுதியில் இருந்து கிளம்பி அதிகாலை 3 மணியாவில் கம்பம் வந்து சேர உள்ளது.
கும்கி யானைகள் வந்து பின் அரிசி கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா அல்லது கும்கி யானைகள் மூலம் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவது என்பது பற்றி தெரியவரும்.
தற்பொழுது கம்பம் நகரில் புளியம் தோப்பில் முகமிட்டு உள்ள அரிசி கொம்பன் யானைக்கு வாழை மரங்கள், பலா காய்கள், தென்னை ஜோகைகள் உணவுக அளவுக்கப்படுகிறது.
அரிசி கொம்பன் உள்ள பகுதியில் வனத்துறை காவல்துறை பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.